உங்களுக்கு அவ்வளவு தான் லிமிட்..!! ஜிவி பிரகாஷ் விவாகரத்திற்கு நான் தான் காரணமா?.. திவ்யபாரதி ஆதங்கத்துடன் வெளியிட்ட பதிவு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர்தான் திவ்யபாரதி. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் என்ற திரைப்படத்திலும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இருவரும் டேட்டிங் செய்து வருவதாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இப்படியான நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவுக்கு திவ்யபாரதி தான் காரணம் என்று ஆதாரம் அற்ற தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருந்தது. இதுவரை அதற்கு எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருந்த திவ்ய பாரதி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சம்பந்தமே இல்லாமல் ஒரு குடும்ப விஷயத்துடன் என்னை யாரும் தொடர்பு படுத்தி பேச வேண்டாம்.

ஜிவி பிரகாஷின் குடும்ப பிரச்சனைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் ஒருபோதும் ஒரு நடிகருடன் டேட்டிங்ஸ் செல்ல மாட்டேன். அதிலும் ஒரு திருமணமான ஆணுடன் டேட்டிங் செல்ல மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்க தேவை இல்லை என்று நம்பி நான் இதுவரை அமைதியாக இருந்தேன். இருந்தாலும் இது எல்லை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

ஆதாரம் மற்ற குற்றச்சாட்டுகளால் என்னுடைய நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான மட்டும் சுதந்திரமான பெண். நான் வதந்திகளால் ஒருபோதும் வரையறுக்கப்பட மாட்டேன். எதிர்மறையை பரப்புவதற்கு பதில் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். என்னுடைய எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை என்று திவ்யபாரதி அதில் தெரிவித்துள்ளார்.

Read Previous

வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை..!! போலீசார் விசாரணை..!!

Read Next

கல்யாண வீட்டு காரசாரமான வத்த குழம்பு ரெசிபி..!! முழு செய்முறை விளக்கம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular