ஆண்மை பலப்பட இந்த அரிசி மட்டும் சாப்பிடுங்க போதும்..!! ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!
இந்த காலகட்டத்தில் பல ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு உள்ளது. இந்த ஆண்மை குறைபாட்டால் பல குடும்பங்கள் பிரிகின்ற சூழ்நிலை கூட தற்போது வருகிறது. இந்நிலையில் ஆண்மை குறைபாடு நீங்கி ஆண்மை பலப்பட இந்த அரிசி மட்டும் சாப்பிட்டால் போதும் அது என்ன என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசி பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து இரும்புச்சத்து துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது. ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அரிசி மாப்பிள்ளை சம்பா. உடலுக்கு அதிக அளவில் வளம் கொடுக்கக்கூடிய சத்து இதில் இருக்கிறது. குறிப்பாக மாப்பிள்ளை போகிறவர்களுக்கு இது மிகவும் அவசியம் ஆகையால் தான் இளம் வயது உடைய ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியே சாப்பிட கொடுப்பார்கள். மேலும் உடலுக்கு வலுவை கொடுக்கக்கூடிய ஏராளமான சத்துக்கள் இதில் உள்ளது. மாப்பிள்ளை சம்பாவின் சிறப்பே ஆண்மையை பலப்படுத்துவது தான். மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.




