உலகில் “இலவசம்” என்று எதுவும் இல்லை என்பதை புரிய வைத்த அற்புதமான பதிவு..!!

உலகில் “இலவசம்”
என்று எதுவும் இல்லை என்பதை புரிய வைத்த அற்புதமான பதிவு..!!

ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும் அதனுடன் இணைந்த ஒரு கடிதமும் வந்தது. அதில் ஊரில் சிறந்த திரையரங்கில் புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. மேலும் இதை அனுப்பியவர் யார் என்று கண்டுபிடிங்கள் பார்க்கலாம் என்றொரு குறிப்பு அந்த கடிதத்தில் இருந்தது. அதுமட்டுமின்றி தம்பதிகள் இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்து அவர்களால் யார் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை எடுத்துக் கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட தேதியில் பார்த்து முடித்துவிட்டு வீடு திரும்பினர். வீட்டைத் திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது. அதில் என்ன படம் சூப்பரா என்று எழுதி இருந்தது அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது. அது யார் என்றால் திருடன் தான் அவன். இதிலிருந்து நாம் அனைவரும் புரிந்து கொள்வது என்னவென்றால் இலவசம் என்று யார் கொடுத்தாலும் அதை நாம் பெற்றுக் கொள்ளக் கூடாது. இலவசம் என்று கொடுப்பவர்களுக்கு ஏதாவது ஒரு பலன் இருக்கப்போய்தான் அதை நமக்கு இலவசமாக கொடுக்கின்றனர் என்பதையும் நாம் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

Read Previous

செல்வத்தை வாரி குவிக்கும் வெள்ளை எருக்கன்..!! கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Read Next

வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது ஏன் தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular