நாம் தினசரி சமையலுக்கு பயன்படுத்தும் கருவேப்பிலையை வைத்து ஒரு குழம்பு செய்யலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..?? கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம் அது நம்மில் பலருக்கும் தெரியும். அதை வைத்து ஒரு அற்புதமான குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கறிவேப்பிலை குழம்பு செய்யதேவையான பொருட்கள்:
உருவிய கறிவேப்பிலை – 2 கப்
சின்ன வெங்காயம் – 1/4 கிலோ
பூண்டு – 1
சோம்பு – 2 டீஸ்பூன்
சாம்பார் பொடி – 4 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க – கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
கறிவேப்பிலை குழம்பு செய்ய முதலில் கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் உப்பு மற்றும் புளி மிளகாய் தூள் எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்தம் பருப்பு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து ,நறுக்கிய பூண்டு வெங்காயம் வதக்கி வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அரைத்த கரறிவேப்பிலை கலவையை போட்டு பத்து நிமிடம் வதக்கி எண்ணெய் மேலே பிரிந்து வந்ததும் இறக்கினால் அருமையான கறிவேப்பிலை குழம்பு தயார்.




