ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று மாலை 3:30 மணியளவில் டெல்லி அணிக்கும் சென்னை அணிக்கும் சென்னையில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற டெல்லி, முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்தது. கடந்த இரண்டு போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் வீரர்கள் 183க்கு 6 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், கே எல் ராகுல் என்னும் வீரர் 77 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்களும் அவருக்கு கய் கொடுத்து அசத்தினர். பௌலிங்கில் சென்னை அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் ரவீந்திர ஜடேஜா மதீஷா புதிரான மற்றும் நூர் அஹ்மத் என்னும் வீரர்கள் தலா 1 விக்கெட்டுகளை எடுத்தனர். மேலும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய சென்னை அணி முதலில் பொறுமையாக தொடங்கியது. தமிழக வீரரான விஜய் சங்கர் 69 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை வழங்கவில்லை. இறுதியில் சென்னையனியால் வெறும் 158 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டியை வென்ற டெல்லி அணி தனது மூன்றாவது வெற்றியை இந்த வருடம் பதிவு செய்தது. மேலும், தொடர்ந்து மூன்று போட்டிகளை தோற்று பரிதமான நிலையில் சென்னை இருக்கிறது.




