நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் படம் எடுக்கப்பட்டு ரிலீசுக்கு காத்திருக்கும் படம் தான் குட் பேட் அக்லி. வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்திற்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. ரசிகர்கள் காலை நாலு மணி அளவில் படம் காட்சியிடப்படுமா என்று ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் காலை 9 மணி அளவில் தான் முதல் காட்சி திரையிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒன்பது மணிக்கு தான் முதல் கட்சி என்றாலும் மற்ற மாநிலங்களில் நான்கு மணி காட்சி போட அனுமதி உண்டு. ஆனால் அப்படி செய்தால் ஒருவேளை விமர்சனங்கள் வெளியாகி அந்த விமர்சனங்களால் இந்த படத்திற்கு ஏதேனும் பாதிப்பு வந்து விடுமோ என்று பிற மாநிலங்களிலும் 9:00 மணிக்கு காட்சியிட பட குழு முடிவெடுத்துள்ளது.
இங்கு தமிழகத்தில் 9:00 மணிக்கு தான் முதல் காட்சி என்றாலும் பிற மாநிலங்களில் நாலு மணிக்கு காட்சியிடப்படுவதால் ரசிகர்கள் பலர் தமிழகத்தில் இருந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படத்தை பார்த்து வருகின்றனர். ஆனால் இந்த செய்தி அவர்களுக்கு எல்லாம் சோகத்தை தந்துள்ளது.



