இந்த காலகட்டத்தில் பலருக்கும் சர்க்கரை நோய் என்பது இருக்கிறது. இந்நிலையில் சர்க்கரை நோயை அழிக்க வெந்தயத்தை மட்டும் இவ்வாறு சாப்பிட்டால் போதும். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். . பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீத்தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள். இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.முதல் நாள் இரவில் வெந்தய்த்தை ஊற வைத்து மறு நாள் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்துடன் நீரையும் சேர்த்து பருக வேண்டும். ஊற வைக்காமல் வெந்தய்த்தை வெறுமனே சாப்பிடுதல் உடலுக்கு பாதிப்பை தரும்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவதால் நல்ல மாற்றங்களை காண்பீர்கள்.குறைந்த தீயில் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் செலட்டின் மீது தூவி சாப்பிடவும்.
வெந்தயத்தின் நன்மைகள் : சர்க்கரை வியாதியை வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கச் செய்யும்.




