இங்கு பல பேருக்கு படித்தது எதுவும் அவ்வளவு நேரம் ஞாபகத்தில் இருக்காது. அதனாலேயே நன்றாக படித்தாலும் பரிட்சையில் மதிப்பெண்கள் அதிகமாக எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்க ஞாபக சக்தியை அதிகப்படுத்த கண்களில் உள்ள நரம்புகளை பாதுகாக்க ஒரு சரியான தீர்வாக இருக்கும் வல்லாரை கீரையை சட்னியாக எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக் கீரை – ஒரு கட்டு
தக்காளி, வெங்காயம் – தலா இரண்டு இஞ்சி துண்டு – சிறிதளவு
தேங்காய் துருவல் – அரை கப்
பச்சை மிளகாய் – 8
கடுகு, உளுந்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு எண்ணெய் மற்றும் உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
இந்த வல்லாரைக் கீரையில் இருக்கும் முற்களை நீக்கிவிட்டு நன்றாக சுத்தம் செய்துவிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். வெங்காயம் தக்காளி இஞ்சி ஆகியவற்றை சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்து வல்லாரைக்கீரை தக்காளி வெந்தயம் இஞ்சி, தேங்காய் துருவல் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
அது ஆறியவுடன் தண்ணீர் விட்டு சாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடைசியாக எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கடுகு உளுந்தம் பருப்பு பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து அதில் இந்த சட்னியை சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான வல்லாரைக்கீரை சட்னி தயார்.




