கால் மேல் கால் போட்டு பெண்கள் அமரக்கூடாது ஏன் தெரியுமா..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே பெண்களை கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என்று கூறுவார்கள். அதற்கான காரணம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. முன்னோர்கள் கூறிய ஒவ்வொரு செயலுக்கு பின்னாடியும் ஒரு அறிவியல் ரீதியான காரணம் உள்ளது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பெண்களை கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது என்பதற்கான காரணத்திற்கு பின்னாடியும் அறிவியல் ரீதியான ஒரு காரணம் உள்ளது. அது என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இன்றைய காலத்தில் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் ஆணுக்கு நிகராக தங்களை கருதி கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் பண்டைய காலத்தில் பெண்களுக்கு இது தவறு என்று நமது முன்னோர்கள் நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். கால்தாழ்த்தி வைத்திருப்பதாலோ ஆண்களையோ முதியவர்களை கண்டால் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது அவர்களிடத்தில் மரியாதையை கூட்ட தான் செய்யும் தவிர குறையாது என்று கருதுகின்றனர். மேலும் பெண்களின் கருப்பையை இது சிதைவடைய செய்வதற்கான வாய்ப்புண்டு என்பதால் தான் முன்னோர்கள் பெண்களை கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று கூறியுள்ளனர்.




