Oplus_131072
மரியாதை..?? அற்புதமான சிறுகதை..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் ஏதோ வேலையாக நடந்து சென்றார். அப்போது செருப்பு பிஞ்சு போச்சு அருகே இருந்த வீட்டுக்கு சென்றார் அந்த வீட்டுக்காரரை அழைத்து ஐயா இந்த மாதிரி வரும்போது என் செருப்பு பிஞ்சு போச்சு புது செருப்பு வேற அதனால இதை இப்படியே தூக்கி எறிய மனசு வரல இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வச்சுட்டு போறேன் காலையில என் வீட்டு வேலைக்காரனை அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்கு தாங்கள் அனுமதி தர வேண்டும் என்றார் அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரை பார்த்து ஐயா நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்தன் எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான் நீங்கள் தாராளமாக வைத்துவிட்டு போங்க என்று சொன்னார். சில ஆண்டுகள் கடந்தன ஒரு நாள் அந்த செல்வந்தரை இறந்து போனார் அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது அப்போது நல்ல மழை பிணத்தை தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடமே சென்று ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச் செல்ல முடியவில்லை அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு பிறகு எடுத்துக் கொள்ள அனுமதி தருவீர்களா என்று கேட்டனர். அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார் ஏண்டா யார் வீட்டு பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்க பாக்குறீங்க மரியாதையா எடுத்துட்டு போயிடுங்க என்று கூறினார். உயிர் உடம்பு குள்ள இருக்கும் வரை தான் ஒரு மனிதனுக்கு மரியாதை கிடைக்கும் என்பதை உணர வைத்த பதிவுதான் இது.




