ஒவ்வொரு வீட்டை சுற்றியும் கண்டிப்பா இந்த பத்து வகையான மரங்கள் இருக்க வேண்டும்..!! அவை என்னென்ன தெரியுமா..??
வீட்டுக்கு முன் வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும். வெளியே பப்பாளி மரம் இருக்க வேண்டும். குளிக்கும் தண்ணீர் போகும் இடம் உள்ள பகுதியில் வாழைமரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். பாத்திரங்களை கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும். ஒரு எலுமிச்சை மரம் என்பது வீட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று. அதன் நிழலின் கீழ் பகுதியில் கருவேப்பிலை செடி இருக்க வேண்டும். ஒரு நல்ல செடி இருப்பது அந்த வீட்டிற்கு நல்ல பலன் தரும்.
வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். ஒரு மாமரம் வைக்க வேண்டும். இப்படி இருந்தால் ஒருவர் கூட பசியுடன் தூங்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் இந்த மரங்கள் அனைத்தும் வீட்டிலேயே இருக்கும் ஆனால் இந்த காலகட்டத்தில் இருக்கும் மரங்களை அழித்து அந்த இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்து விட்டோம்.



