கோடை காலத்தில் நாவல் பழம் சாப்பிட்டால் ரொம்ப நல்லது ஏன் தெரியுமா..??
கோடைகாலத்தில் நாவல் பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது என்று கூறுவார்கள் அதற்கான காரணம் என்ன தெரியுமா அதைப்பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
கோடை காலத்தில் பல்வேறு இடங்களில் கிடைக்கும் நாவல் பழம் ஆனது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவை நமது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் முக்கிய மினரல்ஸ் இதில் உள்ளது. இந்தப் பழத்தை சாப்பிடுவதன் காரணமாக நம்முடைய ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதால் ரத்தம் அதிக ஆக்சிஜனை உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள இரும்புச் சத்து நம் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. நாவல் பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உள்ளது.



