பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாக இயற்கையான முறையில் இதையெல்லாம் செஞ்சு பயன்பெறுங்கள்.
கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர குணமாகும்.அம்மான் பச்சரிசி இலையை எடுத்து சுத்தம் செய்து நன்கு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து தயிரில் கலந்து சாப்பிட குணமாகும்.பொடுதலை இலையுடன் சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்டு வர குணமாகும்.ரத்தத்தோடு வெளிப்படக்கூடிய வெள்ளை படுதல் பிரச்சனை குணமாக..இரண்டு செம்பருத்தி பூவுடன் சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைபடுதல் நோய் குணமாகும்.




