SCAM..!! இந்தியா பாகிஸ்தான் போரை பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி கும்பல்..!! மத்திய அரசு அறிவித்த தகவல்..!!

காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பிறகு நமது நாட்டு ராணுவம் எல்லை பகுதியில் தங்களின் தூக்கத்தையும் இயல்பான வாழ்க்கையையும் தியாகம் செய்து மக்களுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று நமக்கு நன்றாகவே தெரியும். அவர்களின் இந்த அயராத உழைப்புக்கு பலரும் நன்றி தெரிவித்தும் பாராட்டியும் வருகின்றனர்.

ஆனால் இதை ஒரு கும்பல் மோசடி செய்யும் சந்தர்ப்பமாக பார்த்து அதை செய்தும் வருகின்றது. இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டு வரும் நிலையில் இதை உபயோகித்து பல மோசடிகள் நடந்து வருகிறது. அதாவது இந்த போர் நடக்கின்ற வேலையில் நம்மால் முடிந்த உதவியை இந்திய ராணுவத்திற்கு தருவோம் என்று கூறி இந்த மோசடி நடைபெறுகிறது.

நிதி உதவி வழங்கி ராணுவத்திற்கு உதவி செய்யலாம் என்று வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்தி பரவலாக பரவி வருகிறது. இப்படி ஒன்று மத்திய அரசால் அறிவிக்கப்படவே இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அரசு தெரிவித்துள்ளது. இது போன்ற தகவல்கள் எது வந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்றும் புறக்கணிக்க வேண்டும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

Read Previous

மது பிரியர்களுக்கு விஞ்ஞானிகள் கொடுத்த எச்சரிக்கை..!! இது தெரிந்தால் உங்களின் மதுப்பழக்கம் நின்றுவிடும்..!!

Read Next

தமிழகத்தில் காற்றுடன் கூடிய மழை..!! இன்பச் செய்தியை அறிவித்து IMD..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular