தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு மத அரசியல் செய்பவர்களுக்கு அஜித் கொடுத்த ரிப்ளை..!! என்ன சொன்னார் தெரியுமா..!!

பஹல்கமில்  நடந்த தாக்குதலுக்குப் பிறகு நமது நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகள் அனைவரின் மதம் என்னவென்று கேட்டதாகவும் ஹிந்து என்று தெரிந்தவுடன் கொலை செய்ததாகவும் ஒரு தகவல் அங்குள்ளவர்கள் மூலம் நமக்கு கிடைத்தது. அந்த தகவலின் பிறகு அனைவரும் ஒரு மதத்தை அதிகமாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதை வைத்து பலரும் மதம் மற்றும் ஜாதி அரசியலையும் செய்து வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தும் இந்த நாட்டை விட்டு செல்லச் சொல்லியும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக சொல்லி வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்று நம் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தபோது அஜித் அவர்கள் ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

அதாவது இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தான் அவரது இதயம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதலை போன்று இனி எந்த சம்பவமும் நடக்க கூடாது என்றும் அவர் வேண்டியுள்ளார். அது மட்டுமில்லாமல் ஜாதி மதம் என இந்தியர்களுக்கு உள்ளேயே நாம் எப்போதும் சண்டையிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் அனைத்து ஜாதியை சார்ந்த மக்களும் மதத்தைச் சார்ந்த மக்களும் மற்றவர்களை மதித்து ஒற்றுமையான அமைதியான சமூகத்தை உருவாக்கி அதில் நாம் வாழ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read Previous

தமிழகத்தில் காற்றுடன் கூடிய மழை..!! இன்பச் செய்தியை அறிவித்து IMD..!!

Read Next

இந்தத் துவையலை செய்து கொடுத்தால் நொடியில் காலியாகிவிடும்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular