விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! இலவச மின் இணைப்பை அமல்படுத்திய தமிழக அரசு..!!

விவசாயிகள் நமது நாட்டின் முக்கியமானவர்களாக திகழ்கின்றனர். இவர்களின் உழைப்பு எப்போதும் பலரால் பாராட்டப்பட்டு வருகின்றது. ஆனால் இவர்களுக்கு பல சிக்கல் ஏற்பட்டு கொண்டே தான் இருக்கும். அப்படி சூரிய சக்தி பம்பு செட்டை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக மின் இணைப்பு தரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை இப்போது தமிழக அரசு மின்சாரத்துறை திரும்ப பெற்றுள்ளது. ஏப்ரல் எட்டாம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் சூரிய சக்தி பம்பு செட் வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு விவசாயிகளிடையே எதிர்ப்புகள் பல கிளம்பின. இதன் காரணமாக விவசாயிகளின் நலனுக்காக அந்த சுற்றறிக்கையை ரத்து செய்வதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Read Previous

அன்பு சகோதரர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள்..!! எடப்பாடி பழனிச்சாமி போட்ட டுவீட்..!!

Read Next

யதார்த்தம்..!! அருமையான சிறுகதை..!! மனதை கலங்க வைத்த பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular