மூளை வளர்ச்சி அடைய இந்த வெண்டைக்காய் பொரியலை சமைத்து பாருங்கள்..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை இதோ..!!

நாம் வெண்டைக்காயை சாப்பிடுவதால் நமது மூளை வளர்ச்சி அடைந்து நமது உடலுக்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கும். இதை நாம் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். ஆகையால் வெண்டைக்காயை வைத்து பொரியல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் மிகத் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்: 
வெண்டைக்காய் – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 5,
பொட்டுக்கடலை – 5 ஸ்பூன்,
மிளகு, சீரகம் – சிறிதளவு,
கொத்தமல்லி – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கடுகு – ஒரு ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

250 கிராம் வெண்டைக்காயை எடுத்து தண்ணீரில் அலசி விட்டு குட்டி குட்டியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு வெண்டைக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

வதங்கிய பின்பு உப்பு போட்டு சிறிது நேரம் வதக்கவும். ஒரு ஜாரை எடுத்து 5 ஸ்பூன் பொட்டுக்கடலை 3 காய்ந்த மிளகாய் மிளகு சீரகம், கொத்தமல்லி விதை கருவேப்பிலை சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும். வெண்டைக்காயில் இந்த மசாலா பவுடரை கொட்டி கிளறி விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான வெண்டைக்காய் பொரியல் தயார்.

Read Previous

உடம்பு வலி போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கிறதா..!! இந்த சூப்பை குடியுங்கள் போதும்..!!

Read Next

காபி குடிப்பது நன்மையா இல்லை தீமையா..!! அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஐவில் வெளிவந்த உண்மை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular