நமக்கு வடை என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் அந்த வடை சுவையாக மட்டுமல்லாமல் சத்தானதாகவும் இருந்தால் அதை யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். அப்படி இன்று வாழைப்பூவை வைத்து வடை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – 1,
கடலைப்பருப்பு – 1 கப்,
காய்ந்த மிளகாய் – 2,
பச்சை மிளகாய் – 5,
பெருஞ்சீரகம் – சிறிதளவு,
வெங்காயம் – 2,
கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
இஞ்சி, பூண்டு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வாழைப்பூவை எடுத்து சுத்தம் செய்து குட்டியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஒரு கப் கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி மூணு மணி நேரம் ஊற வைக்கவும். ஜாரில் இஞ்சி பூண்டு சிறிது சேர்த்து பச்சை மிளகாய் பெருஞ்சீரகம் ஊற வைத்திருக்கும் கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் குட்டியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி பெருங்காயத்தூள் வாழைப்பூ உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
அதை உருண்டைகளாக வடை போல தட்டி எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான வாழைப்பூ வடை தயார்.




