முகத்தில் உள்ள பரு,மங்கு,கரும்புள்ளி ஆகியவை மறைய எளிய மூலிகை வைத்தியம்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

முகத்தில் உள்ள பரு,மங்கு,கரும்புள்ளி ஆகியவை மறைய எளிய மூலிகை வைத்தியம் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க…

தேவையான மூலப்பொருட்கள்

1.முல்தானிமட்டி பொடி – 1 ஸ்பூன் அளவு
2.பூலங்கிழங்கு பொடி – 1 ஸ்பூன் அளவு
3.வெட்டிவேர் பொடி- 1 ஸ்பூன் அளவு
4.குப்பைமேனி பொடி – 1 ஸ்பூன் அளவு
5.கருப்பு நன்னாரி வேர் பொடி – 1 ஸ்பூன் அளவு
6.அதிமதுரம் பொடி – 1 ஸ்பூன் அளவு
7.சிகப்பு சந்தனம் பொடி – 1 ஸ்பூன் அளவு

செய்முறை :

மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தும் நாட்டுமருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும் இதனை வாங்கி கொள்ளுங்கள்.கூறிய அளவுகளை சரிசமமாக எடுத்து கொள்ளுங்கள்.அதற்கு தேவையான அளவு ரோஸ் வாட்டர் அல்லது தயிர் கலந்து கொள்ளுங்கள்.ஒரு வகை பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:

காலை வேலை மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டும்…
குளிப்பதற்கு 30நிமிடம் முன்பு முகத்தில் தடவி நன்கு காய வையுங்கள்
30 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவி விடவும்.

இதை வாரம் ஒரு முறை அல்லது 2 வாரத்திற்கு ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும்…அடிக்கடி கூடாது

மருத்துவ நன்மைகள்:

இது முற்றிலும் இயற்கையானது இது பயன்படுத்தும் பொழுது முகத்தில் உள்ள அழுகை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது இதனால் முகம் பொலிவு பெறும்
மரு, மங்கு,கரும்புள்ளி,கருவளையம் ஆகியவை நீங்கும்

முக்கியமாக வயதுக்கு வந்த காலத்திலே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் அனைத்து முக பிரச்சனைக்கும் இது நல்ல தீர்வு.ஆண் பெண் இருபாலரும் பயன்படுத்தலாம்.

Read Previous

தேங்காயை இரவு நேரங்களில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular