குடல் புண்ணை இயற்கையான முறையில் குணப்படுத்தும் வழிமுறைகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் வயறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அனைவரும் சந்தித்து வருகின்றோம், அதிலும் குடல் புண் போன்றவை பெரும் நோயாக கருதப்பட்டு வருகின்றது. சரியான சமயத்தில் சாப்பிடாது இருத்தல் மற்றும் ஜங் உணவுகளை எடுத்துக் கொள்வதால் இவ்வாறு குடல் புண் ஏற்படுகின்றது. இந்த குடல் புண்ணை இயற்கையான முறையில் குணப்படுத்துவது எவ்வாறு என்பதை தெரிந்து கொள்வோம்.

குடல் புண்ணை இயற்கையான முறையில் குணப்படுத்தும் வழிமுறைகள் மஞ்சள் ஒரு சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டதாகும். மஞ்சள் ஒரு ஆக்சிஜனேற்ற காரணியாக உள்ளது. இது குடல் பகுதியில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை தடுத்து வீக்கத்தை குறைக்க உதவி செய்கிறது. உணவு அல்லது உணவு பொருட்களில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது நம் மூலம் குடல் புண்கள் குணமடையும். மேலும் வெதுவெதுப்பான தண்ணீரில் மஞ்சள் துறை கலந்து குடித்து வரலாம் .

தேநீர் அதிக ஆக்சிஜனேற்ற நன்மைகளை கொண்டுள்ளது. இது குடல் புண்களை எதிர்த்து போராட பயனுள்ளதாய் அமைகின்றது. தேநீரில் உள்ள பண்புகள் குடலில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து குடல் சுவற்றில் பாதுகாப்பை உறுதி செய்கின்றது.

இயற்கை மருத்துவத்தில் இஞ்சி முக்கிய மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. அஜிரணம் வாயு போன்ற இரைப்பை நோய்களுக்கு இஞ்சி அருமருந்தாய் பயன்படுகிறது. இதில் குடல் புண்ணை குறைக்க உதவுகிறது. இஞ்சியை உணவு மற்றும் உணவுகளில் ஒரு மூலப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

நெல்லிக்காய் அல்லது ஆம்லா ஒரு உணவு பொருளாக உட்கொள்ளப்படுகிறது. இது ஆயுர்வேதா மற்றும் சித்த மருத்துவமனைகளில் மருத்துவ பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டு உள்ளதால் குடல் புண்களை ஆற்ற உதவி செய்கின்றது. மேலும் இரைப்பை புண்களையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

கற்றாழை உடல் நலத்திற்கு முக்கிய மூலிகை மருந்தாக பயன்படுகிறது. கற்றாழையில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இது வயிற்றுப் புண்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. கற்றாழையை வெறும் வயிற்றில் விளங்கி வந்தால் குடல் புண்கள் வயிற்று புண்கள் குணமடைகிறது. கற்றாழை ஜெல்லை தண்ணீரில் சேர்த்து பருகினால் வயிற்றில் உள்ள வீக்கத்தை குறைக்கலாம்.

ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் பொருள்களை ஒன்றாக தேன் உள்ளது, இரைப்பை அலர்ஜி வயிற்றுப்புண் குடல் புண் போக்குதல் தேன் முக்கிய பங்கு வகிக்கின்றது. வயிற்றுப்புண் குடல் புண் இருப்பவர்கள் நேரடியாக ஒரு ஸ்பூன் தேன் சாப்பிடலாம் அல்லது வெது வெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கலாம்.

Read Previous

மாம்பூவில் கொட்டி கிடக்கும் மருத்துவ நன்மைகள் இது தான்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

TNPSC ஆணையத்தில் வேலை.. 330 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular