பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் ஆரோக்கிய புதையல் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..??
பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் ஆரோக்கிய புதையல் என்னவென்று தெரிந்து கொள்ள கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும். பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் ஆரோக்கிய புதையல் ஆரோக்கியம் நிறைந்த புதையல் இஞ்சி.
இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி உலர்ந்த தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் நரை, திரை, மூப்பு சீக்கிரம் நெருங்காது என்கிறது சித்த மருத்துவம். மேலும் இஞ்சியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஜெரும்போன் எனும் பொருள் புற்று செல்களின் வளர்ச்சியை தடுக்கும் மரபணுவை தூண்டுவதாகவும் வேறு இடங்களுக்கு புற்றுநோய் செல்கள் பரவுவதையும் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குரல் கம்மல் இருக்கும்போது தோல் சீவி இஞ்சியை மென்று அதன் சாற்றை கொஞ்சமாக விழுங்கினால் உடனே சரியாகிவிடும். இரப்பையில் தங்கும் உணவுப் பொருட்களின் நகர்வை விரைவுபடுத்தி செரிமானத்தை அதிகப்படுத்த இது உதவுகிறது. சாப்பிட்டு முடித்ததும் சிறிது இஞ்சித்துண்டை வாயில் போட்ட சுவைக்கும் ஆரோக்கியமான பழக்கம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. பூமிக்கு அடியில் மறைந்திருக்கும் ஆரோக்கிய புதையலான இஞ்சியின் தோளில் நச்சுப் பொருட்கள் இருப்பதால் தோல் நீக்கி பயன்படுத்த வேண்டும். பார்வைக்கு மெல்லிய தோளுடனும் மெத்தென்றும் தொட்டுப் பார்க்கும்போது சற்று திடமாகவும் இருக்கும் இஞ்சியை வாங்குவதே சிறந்தது.




