நம்மில் பல பேருக்கு மிகவும் பிடித்த ஒரு பலமாக இருப்பது தான் ஆப்பிள். இதில் பல்வேறு நன்மைகள் அடங்கியிருக்கிறது. ஆகையால் இதை சாப்பிடுவதில் நிறைய பேர் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல பிரச்சனைகள் நமது உடலில் வந்து சேரும். அதனைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
ஆப்பிளில் நார் சத்து மிகவும் அதிகமாக இருப்பதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது மலச்சிக்கல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் ஆப்பிளை சாப்பிடும் போது புளிக்கும் சம்பந்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் சளி பிடித்து விடும்.
ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஆப்பிளுக்கு மேல் சாப்பிடக்கூடாது. அப்படி செய்தால் பல பிரச்சினைகள் நமது உடலில் வந்து சேரும். ஆகையால் அளவோடு இந்த ஆப்பிளை சாப்பிட்டு அதில் இருக்கும் நன்மைகளை நமது உடலுக்கு சேர்த்து வைப்போம்.




