நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போது இருக்கும் நவீன காலத்தில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்ற பொருட்களை நாம் கம்மியாக தான் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இன்று கருவேப்பிலை பொடியை நாம் அதிகமாக சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்.
கருவேப்பிலை பொடியை அதிகமாக சாப்பிடும் காரணத்தினால் அஜீரண பிரச்சனைகள் சரியாகி செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை நீக்கி வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய முக்கிய பங்கை வகிக்கும். அது மட்டும் இல்லாமல் ரத்தத்தில் இருக்கும் சிவப்பணுக்களை அதிகரிக்க இது மிகவும் உதவி செய்கிறது.
இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஒரு முக்கிய பங்கு வகித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் நமது கண் ஆரோக்கியத்திற்கும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் இதை நிச்சயமாக சாப்பிடலாம். ஆகையால் இத்தனையும் மருத்துவ குணங்களை உள்ளடக்கிய கருவேப்பிலை பொடியை சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் சேர்த்து வைப்போம்.




