Oplus_131072
ஒருமுறை இந்த மாதிரி ஒரு முட்டை மிளகு கிரேவி செஞ்சு பாருங்க சுவை அம்புட்டு ருசியா இருக்கும் வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க அது எப்படி பண்றதுன்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி
அதில் பட்டை கிராம்பு ஒன்று போட்டு
10 சின்னவெங்காயம் , 1 பெரியவெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிவிடவும்
அதுலே காஞ்சமிளகை ,கருவேப்பிலை, இஞ்சிபூண்டுபேஸ்ட் ,
சேர்த்து நல்ல சுருங்கி வந்தபிறகு
பொடியா நறுக்கின தக்காளி ,உப்பு, பச்சைமிளகாய் ஒன்று சேர்த்து ஒருமுறை வதக்கிய பின்னு ,
2 ஸ்பூன் மிளகு இடித்து பொடிசெய்து சேர்த்து வதக்கிவிடவும்
கடைசியில் அவிச்ச முட்டை சேர்த்து என்னைப்பிரிந்து வரும்பொழுது
இறக்கி சாப்பிட்டு பாருங்கள். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்த முட்டை கிரேவி இருக்கும். அதுமட்டுமின்றி இதை சாதம் தோசை இட்லி சப்பாத்தி புரோட்டா என அனைத்திற்கும் பொருந்தும் வகையிலும் இருக்கும். கண்டிப்பா இந்த கிரேவிய நீங்க ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க அம்புட்டு ருசியா இருக்கும்.




