உங்க வீட்ல கேஸ் அடுப்புல ஆரஞ்சு கலர்ல தீ எரியுதா? அப்போ உஷாரா இருங்க!
நம் அன்றாட வாழ்க்கையில் கேஸ் என்பது அனைவரின் வீடுகளிலுமே ஒரு முக்கியமான ஒன்று. அதாவது கேஸ் அடுப்பு இந்த காலகட்டத்தில் இல்லாத வீடு இல்லை என்று கூட சொல்லலாம். இந்நிலையில் கேஸ் அடுப்புல ஆரஞ்சு கலர் தி தீ எரிஞ்சா என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன்னா, கேஸ் அடுப்பு நீல நிறத்துலதான் எரியணும். ஆரஞ்சு கலர்ல எரிஞ்சா, அது கார்பன் மோனாக்சைடு (carbon monoxide) கசிவு ஏற்படுதுன்னு அர்த்தம். இது சமைக்கிறவங்களுக்கு தலைவலி, ஆஸ்துமா மாதிரி உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கலாம்.
இதைச் சரி செய்ய, பேக்கிங் சோடா போட்டு பர்னரை நல்லா கழுவலாம். உங்க வீட்ல இப்படி வருதான்னு செக் பண்ணிக்கோங்க!




