பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ள நடிகை டயானா பென்டி, சமீபத்தில் நடந்த தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “மும்பையில் வசிக்கும் ஒவ்வொரு பெண்ணும் பல கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருப்பார்கள். நான் கல்லூரிக்கு மின்சார ரயிலில் செல்லும் போது முழங்கைகளால் என் உடலில் அழுத்துவார்கள். இது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகவே மாறிவிட்டது. இத்தகைய தகாத தொடுதல்களை அனுபவித்து, தவித்து போனேன்” என தெரிவித்துள்ளார்.




