தெலங்கானா மாநிலத்தில் பாஜக தலைமைக்கான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைமைக்கான மோதல்களால் அதிருப்தி அடைந்ததாக கூறி, தெலங்கானா எம்எல்ஏ டி. ராஜா சிங் தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு அனுப்பியுள்ளார். மேலும், அவர் “பாஜகவிலிருந்து விலகினாலும், இந்துத்துவா சித்தாந்தம் மற்றும் தர்ம சேவை மீதான தனது அர்ப்பணிப்பு மாறாமல் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.




