கர்நாடகா: பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு குப்பை லாரியில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஷா (34) என்ற பெண், முகமது ஷம்சுதீன் என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஷம்சுதீன், ஆஷாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதன்பின்னர், அவரது உடலை சாக்கு மூட்டையில் வைத்து, குப்பை லாரியில் வீசியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஷம்சுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.




