இரும்புச்சத்தை அள்ளித்தரும் முருங்கை கீரை குழம்பு செய்வது எப்படி?..

மொத்த மரமே மருத்துவ குணம் வாய்ந்தது என்றால் அது முருங்கை, முருங்கை இலையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த முருங்கை இலைகளை அடிக்கடி சாப்பிட முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.

ஆகவே முருங்கை கீரை வைத்து எப்படி சுவையானதொரு குழம்பு செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

வறுத்தெடுக்க

  • அரிசி
  • பருப்பு

பேஸ்ட்

  • தேங்காய் – 1/2 மூடி
  • மிளகு – 01 தே.கரண்டி
  • சீரகம் – 01 தே.கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 08

சமைப்பதற்கு

  • நல்லெண்ணெய்
  • சின்ன வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • கடுகு
  • புளி
  • பருப்பு
  • முருங்கை கீரை

செய்முறை

  • அரிசி மற்றும் பருப்பை நன்றாக வறுத்தெடுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • பேஸ்டிற்கு எடுத்து வைத்த பொருட்களைக்கொண்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கடுகு சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
  • பின் அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் வதக்கிக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் புளி கலவையும் ஊற்ற வேண்டும்.
  • இறுதியாக பருப்பு அரைத்து வைத்த பொடியை சேர்த்து, அதனுடன் கீரை மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • தண்ணீர் விட்டு சிறுது நேரத்தில் இறக்கினால் சுவையான முருங்கை கீரை குழம்பு தயார்.

Read Previous

சக ஊழியரை ரகசியமாக வீடியோ எடுத்த பிரபல நிறுவன ஊழியர் கைது..!!

Read Next

மரணம் நிகழ்ந்த வீடு..!! அன்றைய நிலை.. இன்றைய நிலை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular