ஒருபோதும் நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் செலவிடாதீர்கள்.
நீங்கள் முதலீடு செய்யாத ஒவ்வொரு
ரூபாயும் உங்கள் பாக்கட்டிலிருந்து பறந்துவிடும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
பணம் சேமிக்கப்படும் ஓன்றல்ல. அது முதலீடு செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரே ஒரு வருமான வழியில் தங்கியிருக்காதீர்கள். வெவ்வேறு வருமான வழிகளை உருவாக்கி நிதிப் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.
பகட்டு வாழ்க்கை கண்டு ஏமாறாதீர்கள்.
உங்கள் வருமானத்தின் அளவுக்கு செலவு செய்யப் பழகுங்கள்.
பல்கலைக்கழகப் பட்டத்தை விட நிதிப் பாதுகாப்பு பற்றிய அறிவு மிக முக்கியம் என்பதை மறவாதீர்கள்.
யார் என்ன சொன்னாலும் உங்களுக்குத் தெரியாத முதலீடுகளில் சென்று நீங்கள் சிக்காதீர்கள்.
சிறிய முதலீடாக இருந்தாலும் இடையில் நிறுத்தாமல் தொடருங்கள்.
தெரிந்துகொள்ளுங்கள்! செலவழித்தால் அந்த நாளோடு முடிந்துவிடும், சேமித்தால் நாளை ஒரு நாள் உதவும், முதலீடு செய்தால் எந்நாளும் உதவும்.![]()
பணத்துக்காக நீங்கள் வேலை செய்யதீர்கள். பணம் உங்களுக்காக வேலை செய்யும் நிலைக்கு ஆக்குங்கள்.![]()
கைசேதப்பட முன்னர் சேமிக்கப் பழகுங்கள் கைநழுவிப் போக முன்னர் முதலீடு செய்யப் பழகுங்கள். காசு பணம் அதிஷ்டமாக வந்து சேராது. மாறாக நீங்கள் அன்றாடம் எடுக்கும் சிறந்த நிதிசார் தீர்மானங்ஙளால் தான் உங்களை வந்து சேரும்.




