மனதை நெகிழ வைத்த புகைப்படம்![]()
ஒரு அண்ணன் தனது தங்கையை பாடசாலைக்கு தூக்கி செல்கிறான் எத்னை யுகங்கள் நவ நாகரீகங்கள் மாறினாலும் அண்ணன், தங்கை பாசத்தில் சிறிதளவு கூட மாற்றம் நிகழாது என்பதற்கு இந்த புகைப்படம் ஒரு சாட்சி
எவ்வளவு வறுமையில் இருந்தாலும் ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பிகள் இருந்தால் அங்கு வாழும் பெண் ராஜகுமாரிதான் அவ்வளவு பாசம் அவ்வளவு பாதுகாப்பு அண்ணன் தம்பிகளிடம் கிடைக்கும்
அண்ணன் அல்லது தம்பிக்கு வேலை இல்லை, கையில் பணம் இல்லை, என்றால் கூட அண்ணன் அல்லது தம்பியிடம் அந்த பெண் விருப்பப்பட்டு ஏதேனும் பொருள் அல்லது திண்பண்டங்கள் கேட்டுவிட்டால் போதும் என்ன பாடுபட்டாவது அதை வேண்டி கொடுத்து மனம் திருப்தி அடையும் சகோதரர்களை நான் பார்த்திருக்கிறேன்
அப்படிப்பட்ட அண்ணன் தம்பிகளிடம் அந்த பெண் அவ்வளவு சண்டை போடுவாள், எவ்வளவோ அதிகாரம் கட்டுவாள், சில நேரங்களில் வாடா, போடா, என்று கூட திட்டுவாள், ஆர்ப்பரிப்பாள், அடிக்க முடியாது என்று தெரிந்து அண்ணன் தம்பிகளின் உடைகள் பொருட்களை வெளியில் வீசுவாள், இவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்த போதும் அப்பா, அண்ணன் தம்பி அனைவரும் அமைதியாகத் தான் இருப்பார்கள் அவளது அந்த கோபத்தை ரசித்துதான் பார்த்திருக்கிறேன்
அந்த குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு தெரியும் இந்த வீட்டில் இருக்கும் வரைதான் அவள் இவ்வளவு செல்லமாகவும், அதிகாரத்துடன் வாழ முடியும் அதனால் தாய் மாத்திரமே அவளது கோபத்தை கண்டிப்பாள்
இப்படி பத்திரகாளியாக குதித்து சில மணி நேரம் முகத்தை உம்மென்று வைத்திருக்கும் அந்த அக்கா அல்லது தங்கைகயின் கோபத்தை அவர்கள் வேண்டி வந்து கொடுக்கும் திண்பண்டங்கள் உடனே தனித்து விடும்
ஒரு பெண் தனது அண்ணன், தம்பியை அவள் எவ்வளவும் திட்டலாம் கண்டிக்கலாம் அதையே அம்மா, அல்லது அப்பா அதே போல் வெளி நபர்கள் செய்ய முற்படும் போது எற்கமாட்டாள். அண்ணன் தம்பி தவறு செய்திருந்தாலும் அவர்கள் பக்கமே நின்று வாதிடுவாள் இந்த அண்ணன் தங்கை பாசம் என்பதற்கு ஒப்பிட்டுப் பேச உலகில் எதுவுமில்லை அது வார்த்தைகளால் விபரிக்க முடியாத ஒன்று
இந்த அண்ணன், தம்பிகளின் காதலுக்காக அக்கா தங்கைகள், செய்யும் தியாகங்களும் தூதுகளும் மிகவும் சுவாரஷ்யமாகவும் நகைச் சுவையானவும் இருக்கும் இவர்களின் காதலை எந்த குறையும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டு அவர்கள் காதலை வெற்றி பெற பாடுபடும் அக்கா தங்கைகளின் காதலை எந்த அண்ணன் தம்பிகளும் ஏற்றுக் கொள்வதில்லை (அண்ணன் தம்பிகள் அவ்வாறு செய்வதில் நியாயம் உள்ளது)
ஆண்களை அவர்களது அம்மா அப்பா மனைவியை விட அதிகமாக அண்ணன் தம்பிகளை புகழ்ந்து திரிவது இந்த அக்கா தங்கைகள் தான் அவ்வாறு புகழாத அக்கா தங்கைகள் இருக்கவே மாட்டார்கள் அது அவர்களுக்கான பெருமை அது விபரிக்க முடியாத பாசப் பிணைப்பு
ஆலய திரு விழாக்கள், உள்ளூர் கடைகள், மருத்துவ மனைகள், பாடசாலைகள், என்று சைக்கிள்களிலும் கால்நடையாகவும் அதி உச்ச பாதுகாவலர்களாக அண்ணன் தம்பிகள் இருந்த காலங்கள் பெண்களின் வாழ்வில் ஒரு பொற்காலம்
வீட்டுக்குள்தான் அண்ணன் தம்பிகளுடன் சண்டை, சச்சரவுகள், போட்டிகள் ஆனால் அவர்களை பொது வெளியில் கண்டு விட்டால் இனம்புரியாத பயம், மரியாதை, எங்கிருந்துதான் அவர்களுக்கு வருமோ தெரியாது. ”அதில் தெரியும் அவள் அண்ணன் தம்பி மீது வைத்திருக்கும் பாசமும் மரியாதையும் எவ்வளவு என்று”
உங்களுக்கு தெரியுமோ? தெரியாதோ? எனக்குத் தெரியாது! திருமணத்திற்கு முன் ஒரு பெண் சாமி கும்பிடும் போது தனது குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என்று அனைவருக்காகவும் மன்றாடி விட்டே தனக்கானதை மன்றாடுவாள். அதே திருமணத்தின் பின்னரும் தன்னுடைய தாய் தந்தை அண்ணன் தம்பிகளுக்காக மன்றாட மறந்ததில்லை இது வெளியில் எவருக்கும் புரிவதில்லை
ஒரு பெண் திருமணத்தின் முன் தனது குடும் உறவுகளிடம் வைத்திருக்கும் பாசமே சென்ற இடத்தில் பிரச்சனை என்று பிறந்த வீடு வரும் போது அவளை அரவணைத்து பிரச்சனை தீரும் வரை அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கிறார்கள் அல்லது நல்லதொரு வழியை காட்டுகிறார்கள்
இவை எல்லாம் ஒரு பெண் திருமணம் முடித்து மறு வீடு செல்லும் 25 அல்லது 26 வயது வரைதான் அதற்குள் இன்னும் எவ்வளவு ஆனந்தமாக வாழ முடியுமோ வாழ்ந்து விடுங்கள்
பெண்களின் அதிகாரத்தையும் கோபத்தையும் நினைத்ததை நினைத்தவுடன் செய்யும் வாள் தனங்களையும் ரசித்து ஏற்றுக் கொள்வது உங்கள் அண்ணன் தம்பி அப்பாவிடம் மட்டுமே அதனால் முடிந்தவரை இங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து விடுங்கள்..




