தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக தொடர்ந்து முறைகேடுகளை நிகழ்த்தி வெற்றிப் பெற்று வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “தேர்தல் ஆணையம், பாஜகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட காங்கிரஸ் கட்சிகள் சார்பாக வருகிற 11ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.




