திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், அதிமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் காயமடைந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் திருப்பத்தூர் வருகை தர இருக்கிறார். இந்நிலையில், அவரை வரவேற்று சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பேனர் வைக்கப்பட்டது. நேற்று (ஆக.8) வீசிய பலத்த காற்றில் பேனர் கிழிந்து பைக்கில் சென்ற தந்தை, மகன் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தியது.




