ஃபிரிட்ஜ் அடிக்கடி பழுதடைந்து விடுகிறதா..?? செய்யகூடாத விஷயங்கள்..!!

Oplus_131072

 

ஃபிரிட்ஜ் அடிக்கடி பழுதடைந்து விடுகிறதா?

செய்யகூடாத விஷயங்கள்…

நீங்கள் வெளியே செல்லும் போது ஃபிரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்வதும் தவறு. இப்படி அடிக்கடி ஆஃப் செய்து விட்டு செல்வதால் ஃபிரிட்ஜ் பழுதடையலாம். மின்சாரத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்து பெரிய செலவில் மாட்டி கொள்ளாதீர்கள்.

சில நேரங்களில் தேவைக்கு அதிகமாக நிறைய பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்து பராமரிப்போம். ஓவர் லோட் அதாவது, நிறைய பொருட்களை நிரப்பி வைப்பதால் ஃபிரிட்ஜ் பழுதடைகிறது.

பரபரப்பாக சமைக்கும் போது சில சமயங்களில் ஃபிரிட்ஜில் இருக்கும் பொருட்களை எடுப்பதற்காக அதன் கதவை திறந்தே வைத்திருப்போம். இது தவறான செயல். இப்படி நீண்ட நேரம் ஃபிரிட்ஜின் கதவு திறந்து இருந்தால் அது பழுதடைய வாய்ப்புண்டு.

பல சமயங்களில் ஃபிரிட்ஜிக்குள் ஏதாவது கொட்டி விட்டால் அதை நாம் முறையாக சுத்தம் செய்வதில்லை. ஃபிரிட்ஜை முறையாக சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். இதுப்போன்ற நேரங்களில் ஃபிரிட்ஜில் பூஞ்சைகள் வர தொடங்கி விலையுயர்ந்த ஃபிரிட்ஜ் சில நிமிடங்களிலே பழுதடைகிறது.

ஃப்ரிட்ஜில் டீப் ஃப்ராஸ்ட் ஒழுங்காக வேலை செய்யாததால் அதிகமாக பனிக்கட்டி சேர்வதும் ஒரு காரணம்.

செய்ய வேண்டியவை :*

குறைந்த 6 மாதத்திற்கு ஒருமுறை ஃபிர்ட்ஜை சுத்தம் செய்ய வேண்டும்.
முடிந்த வரை ஃபிட்ஜில் வைக்கும் பொருட்களை மூடி வைப்பது அவசியம்.
சூடான பொருட்களை அல்லது பாத்திரங்களை கண்டிபாக ஃபிரிட்ஜில் வைக்க கூடாது.
அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் பிரச்சனை இருந்தால் ஸ்டெபிலைசர் அவசியம்.

 

Read Previous

பள்ளியில் மயங்கி விழுந்த 11-ம் வகுப்பு மாணவன் மரணம்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு..!! 750 காலியிடங்கள்.. ரூ.15,000 சம்பளம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular