ஓடிசாவின் கஜபதி மாவட்டத்தை சேர்ந்த ஜலந்தா – சுபத்ரா தம்பதி. கடந்த ஆண்டு ஏற்பட்ட சண்டையில் ஜலந்தா, சுபத்ராவை கடுமையாக தாக்கியுள்ளார். இதையடுத்து, சுபத்ரா விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், ஜலந்தா தனது மாமனாரின் வீட்டின் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது, அவரது மாமனாரும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜலந்தாவை அவரது மாமனார் ஒரு இரவு முழுவதும் தூணில் கட்டி வைத்துள்ளார்.




