கசப்பான உண்மை..!! அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!! படித்ததில் பகிர்ந்தது..!!

Oplus_131072

#கசப்பான_உண்மை

ஒரு முறை ஒரு குடும்பவியல் வழிகாட்டல் நிகழ்ச்சியின் போது அங்கே வருகை தந்திருந்த ஒரு குடும்பத் தலைவி மேடைக்கு அழைக்கப்படாள்.

அவளிடம்; “உங்கள் கணவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாரா?” என வினவப்பட்டது.

இந்த நேரத்தில் அங்கே அமர்ந்திருந்த
அவளது கணவன், சட்டையை சரி செய்து, தலையை நேராக நிமிர்த்தி நின்று, அவரது மனைவி “ஆம்” என்று சொல்வாள் என்ற
ஆர்ப்பரிப்பில் இருந்தார்.

ஏனெனில் அவனும் அவளை திருமண நாள் தொட்டு இன்று வரை மகிழ்ச்சியாகத்தான் வைத்திருக்கிறான். அவளும் மிக்க மகிழ்ச்சியுடன் தான் வாழ்கிறாள், என்பது அவனுக்கு தெரியும்.

ஆனால் மேடையிலிருந்த அவளது மனைவியிடமிருந்து “இல்லை, என் கணவன் என்னை மகிழ்ச்சியாக வைக்கவில்லை.” என்பதாக பதில் வந்தது.

இப்படியொரு பதில் வரும் என எதிர்பார்க்காத அந்தக் கணவன் திக்குமுக்காடிப் போனான். திகைத்து நின்றான்.

மேடையில் இருந்த அவள் தொடர்ந்தும் பேசினாள்:

“என் கணவர் என்னை இதற்கு முன்னால் மகிழ்ச்சியாக வைக்கவும் இல்லை, இனியும் மகிழ்ச்சியாக வைக்கவும் முடியாது! ஆனால் நான் மிகவும் மகழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்.

” ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’…, என்பது அவரைச் சார்ந்த ஒன்றல்ல. அது என்னைச் சார்ந்தது. என் மகழ்ச்சி என்னை மாத்திரம் சார்ந்த ஒன்று.”

அவள் தொடர்ந்தும் பேசினாள்:

“நான் எப்போதும் எந்த நிலையிலும் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். என் மகிழ்ச்சியை ஒரு நபர் மீது, ஒரு பொருள் மீது, அல்லது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை மீதோ சார்ந்திருக்க வைத்தால் நான் என்னை பெரும் சிக்கலிலும் பேராபத்திலும் தள்ளிவிடுகிறேன் என்று அர்த்தமாகும்.

இந்த மண்ணில் உள்ள அனைத்தும் மாற்றங்கள் காண வல்லவை.

காலங்கள் மாறுகின்றன…
காலநிலைகள் மாறுகின்றன…
பொருளாதார நிலைகள் மாறுகின்றன…
உடல் ஆரோக்கியம், மன நலம், உளவியல்…
என எல்லாம் மாற்றங்கள் கண்டு கொண்டே இருக்கும். உறவினர்கள், நண்பர்கள், ஏன் எனக்காக அனுதாபப்பட்டவர்களும் மாறலாம்.

குறைந்த வசதி இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன். நிறைந்த வசதி இருந்தாலும் நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன்.

ஆரோக்கியமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பேன். நோயாளியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பேன்.

எனக்கு இப்போது திருமணமாகிவிட்டது, நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் நான் திருமணம் முடிக்கும் முன்னரும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.

நான் முதலில் எனக்காக வாழ்கிறேன்.
என் வாழ்வை நேசிக்கிறேன். அதனால் எனது ஆத்மார்த்தம் எனக்கு முக்கியம்.
என் மகிழ்ச்சியை மற்றவர்களில் கழுத்தில் முடிச்சிப் போட்டு வைக்க மாட்டேன்.

உங்கள் மகிழ்ச்சியை தீர்மானிக்கும்
உரிமையை வேறு யாருக்கும் வழங்காதீர்கள்.

முதலில் தன்னளவில் மகிழ்ச்சியாளர்களாக இருக்கப் பழகுங்கள். மகிழ்ச்சி என்பது மனத்திருப்தியும், போதுமென்ற மனமும் தான் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.”

Read Previous

பூமியின் மய்ய அச்சு பின் புறமாக சுழல ஆரம்பித்து விட்டது..?? இதனால் நடக்கப்போவது என்ன தெரியுமா..??

Read Next

பாரம்பரிய வெண்ணைய் புட்டு செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular