கேரளாவில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 18 வயது இளைஞரின் இதயம், இதய நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு தானமாக வழங்கப்பட்டது. Air Ambulance கிடைக்காததால், கொல்லத்தில் இருந்து கொச்சிக்கு வந்தே பாரத் ரயிலில் சிறுமி வரவழைக்கப்பட்டார். இன்று (செப்.13) நள்ளிரவு இதயம் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, நள்ளிரவு 1.25 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை காலை 6 மணிக்கு நிறைவடைந்தது. சிறுமியின் உடலில் பொருத்தப்பட்ட இதயம் இப்போது துடிக்கத் தொடங்கியுள்ளது.




