ஜப்பானில், சடோமி என்ற பெண்ணை, அவர் பணிசெய்யும் இடத்தில் அதிகாரிகள் சிலர் ‘தெரு நாய்’ என திட்டியதாக கூறப்படுகிறது. மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவத்தை அடுத்து, சடோமியின் குடும்பத்திற்கு ரூ.90 கோடி நஷ்ட ஈடாக வழங்க அந்நிறுவன முதலாளிக்கு டோக்யோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு பணியிட துன்புறுத்தல்களுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.




