ஆதாரம் இன்றி வழக்கு தாக்கலால் கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாதம் முன்வைத்துள்ளனர். கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது தொடர்பான பொது நல மனுக்கள் மீது இன்று விசாரணை தொடங்கியுள்ளது. சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 7 பேர் தாக்கல் செய்த மனுக்கள் தனித்தனியாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.




