கர்நாடகாவில் தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் சித்தராமையா அறிக்கை வெளியிட்டுள்ளார். மாநிலத்தில், பசுமை பட்டாசுகள் தவிர மற்ற அனைத்து பட்டாசுகளின் விற்பனைக்கும், வெடிப்பதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை என 2 மணி நேரம் மட்டுமே பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்போருக்கு முழு தடை விதிக்கப்படும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.




