மெக்சிகோவில் பிரிசில்லா மற்றும் ரேமண்ட் புயல்களால் ஹிடால்கோ, புபேல்லா, வெராகுரூஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஹிடால்கோவில் 66 பேர் பலியாகி, 60 பேர் காணாமல் போயுள்ளனர். வெராகுரூஸில் 29 பேர் உயிரிழந்து, 18 பேர் காணவில்லை. 1 லட்சம் வீடுகள் பாதிப்பு, மறுகட்டமைப்பு பணிகள் குறித்து அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டெங்கு காய்ச்சல் பரவலும் அதிகரித்துள்ளது.




