ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (அக்., 17) அறிவித்துள்ளார். இந்த ஆணையம் பல்வேறு தரப்பிலும் கருத்துகளை பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் என்றும் அதன் அடிப்படையில் அரசு சட்டங்கள் இயற்றும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.




