தெலங்கானா மாநிலத்தில் போலீசை ஒருவர் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாமாபாத் நகரில் ஷேக் ரியாஸ் (24) என்ற இளைஞர் தராறில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்த பிரமோத் (42) என்ற போலீஸ்காரர், விசாரணைக்காக தனது பைக்கில் அழைத்துச் சென்றார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், போலீசை குத்திவிட்டு ஷேக் ரியாஸ் தப்பினார். பின்னர், குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.




