வயோதிகம் என்பது வலியல்ல..
முதுமை எல்லா உயிர்களுக்கும் வரும். ஆனா அத நினைச்சு ரொம்ப கவலைப்படறது மனித இனம் மட்டும் தான்.
அதுக்கு மூல காரணம் நம்ம பழக்க வழக்கம் தான்.
முன்னோர்கள் காலத்துல கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைல குடும்ப அமைப்பு கட்டுக்கோப்பு குலையாம
இருந்துச்சு. ஆனா தனிக்குடித்தனம் தலை தூக்க ஆரம்பிச்சதுமே வீட்டுல
உள்ள பெரியவங்க வேண்டாதவங்களா
ஆயிட்டாங்க.
மருமக தனிக்குடித்தனம்
போன கொடுமைக்காரி,
மக தனிக்குடித்தனம்
போன கெட்டிக்காரி….
இந்த நிலை மாறணும்.
வயசானவங்களோட அனுபவ அறிவு ஆயிரம் புத்தகத்துக்கு சமம்.அவங்க சொல்ற கருத்துக்கள காது கொடுத்து கேட்க யாரும் தயாராயில்ல.
ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்பறம்
தனிச்சு விடப்படறாங்க.
அந்த நிலை தான் பல வியாதிகளுக்கு காரணமாயிருக்கு.
நேத்து வரைக்கும் என் பேச்ச கேட்ட புள்ள இப்ப உங்களுக்கு ஒண்ணும் தெரியாது அப்படினு சொல்லிருச்சே.
அப்பாே இனி என்னால யாருக்குமே உபயோகமில்லையா ? இப்படியெல்லாம் தனியா யோசிச்சு மன அழுத்தத்துக்கு
ஆட்படறாங்க.
குழந்தைகள தூக்கி கொஞ்சற சுகம் எத்தன கோடி கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது.சில குடும்பத்துல அவங்கள
பெரியவங்க கிட்ட விடறது இல்லை.
செல்லம் குடுத்து கெடுத்துருவாங்கனு
காரணம் சொல்றாங்க.
வீட்டு பெரியவங்க குடுக்கற அரவணைப்புக்கு ஈடேயில்ல.
குடும்ப பாரம்,வேலை ,குழந்தை வளர்ப்புனு ஓயாம ஓடி முடிச்சு கொஞ்சம் களைப்பாற தவிக்கும் வயோதிக வயது.
முதியோரும் குழந்தைகளும் மனசளவுல ஒண்ணுதான்.வயசானவங்க ஆசைப்படறதெல்லாம் அன்பான பேச்சு தான்.
நா பேசறத கேட்க ஆள் இல்லைகற ஏக்கம் எல்லா முதியோருக்கும் உண்டு.
பெருகி வரும் முதியோர் இல்லங்கள் வரமல்ல ,சாபம்.
உடலாலும் மனதாலும் தளர்ந்து
உள்ள தள்ளாத நடை பயிலும் வயதான குழந்தைகளை தோள் கொடுத்து தாங்குவது நம் ஒவ்வொருவரின்
கடமை……
வயோதிகத்தை வரமாக போற்றுவோம்….
அவர்கள் வாழ்வை வளமாக மாற்றுவாேம்!!!



