குந்தாணி என்றால் என்ன?.. விளக்கம் தெரியுமா?.. தெரிந்து கொள்ளுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_16908288

குந்தாணி என்றால் என்ன?

 

 

 

இன்றைய தலைமுறையினருக்கு குந்தாணி என்பது ஓர் வசவுச் சொல்லாக மட்டுமே தெரியும் ஆனால்…

 

குந்தாணி – என்றால் வாய் அகன்ற பாத்திரம், பெருவுரல், குண்டா, நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல், பருமனான நபர்… என அகராதிகள் கூறுகின்றன.

 

உ லக்கை கொண்டு உரலை குத்தும் (இடிக்கும்) பொழுது தவச (தானிய) மணிகள் வெளியே சிதறாமல் பாதுகாக்கும் வாயகன்ற – புடைப்பான அமைப்புக்கு குந்தாணி என்று பெயர்.

 

குத்துதல் = உலக்கையாற் கூலத்தைத் துவைத்து, இடித்து நொறுக்குதல்.

மேல்பகுதியில் வாய் அகன்றும் கீழ்பகுதியில் உரலுடன் பொருந்துமாறு ஒடுங்கி – புடைப்பான வளையம் போன்ற வடிவத்தில் உரலைச் சுற்றி ஒரு தடுப்பைப் போல பயன்படுகிறது – குந்தாணி.

 

முற்காலத்தில் உரல்கள், குந்தாணி ஆகியவை கருங்கற்களால் செய்யப்பட்டது. உலக்கைகள் மரத்தால் செய்யப்பட்டு இரு முனைகளிலும் பூண் போடப்பட்டிருக்கும். (உலக்கைப் பூண் என்பது மரத்துக்கு போடப்படும் இரும்புக் கவசம்) .

பிற்காலத்தில் வேம்பு, பாலை போன்ற மரத்தில் செய்யப்பட்ட உரல் களும் வழக்கில் இருந்தன.

 

உரல், உலக்கை, குந்தாணி மூன்றும் ஒரே தொகுப்பைச் சேர்ந்த கருவிகள்.

 

துக்கடா :

இடை சுருங்கி இருக்கவேண்டிய பெண்டிர் இடை பெருத்திருந்தால் – ‘குதிர் போல இருக்கிறாள், குந்தாணி போல் இருக்கிறாள்’ … என்று உவமைச் சுட்டால் சொல்வது வழக்காம். இது ஒரு நையாண்டி வழக்கு.:

Read Previous

ஐஸ் கட்டியை வைத்து கழுத்துக்கு பின் 20 நிமிடம் மசாஜ் செய்வதால் உடலில் நடக்கும் அற்புதம்..!!

Read Next

பிரிந்து சென்ற மனைவி.. மகளை பலாத்காரம் செய்த தந்தை..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular