Oplus_131072
அருமருந்தாகும் கருஞ்சீரகம்……
ஆன்டி பாக்டீரியல் தன்மை அதிகமிருப்பதால் இரைப்பை, கல்லீரலில் ஏற்படும் கிருமித்தொற்றை நீக்கும்.
ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகத்துடன் அரை டீஸ்பூன் பூண்டு விழுது சேர்த்து அரைத்து, தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் ஆகியவற்றின் தீவிரம் குறையும்.
கருஞ்சீரகப் பொடியை உடலில் தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் மட்டுப்படும்.
மலச்சிக்கல் பிரச்னைகளிலிருந்து விடுபட தினமும் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சாப்பிடலாம்.
தினம் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவை கட்டுக்குள் இருக்கும்.
கருஞ்சீரகத்துடன் ஓமம், சுக்கு, திப்பிலி, மாவிலங்கப்பட்டையை சம அளவு சேர்த்து இடித்து, நீர்விட்டுக் கொதிக்கவைத்து கஷாயமாக்கி, தினமும் 25 மி.லி வீதம் குடித்தால் மாதவிடாய்க் கோளாறு நீங்கும்.
பொரியல், ரசம் என அன்றாடச் சமையலில் கருஞ் சீரகத்தைச் சேர்த்துவந்தால் உணவும் மருந்தாகும்….



