சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், “தான் தினமும் 20 மாத்திரைகள் எடுத்துவருவதால், உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. என் மீதான எஸ்.டி., எஸ்.சி., வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை இன்று (டிச.12) விசாரித்த நீதிமன்றம், கட்டாயம் விசாரணை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.



