சருமத்தை மென்மையாக வைக்கும் கோதுமை மாவு.. நம்பமுடியாத உண்மை..!!

முகத்தினை பிரகாசமாகவும், மென்மையாகவும் வைப்பதற்கு கோதுமை மாவு உதவுகின்றது. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

கோதுமை மாவு

கோதுமை மாவு இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்பட்டு முகத்திலிருக்கும் அழுக்குகள் மற்றும் எண்ணெய் கலவைகளை நீக்குவதுடன், முகம் பொலிவுடன் காணப்படுமாம்.

தொடர்ந்து இதனை பயன்படுத்தும் போது, முகத்தில் காணப்படும் சிறு சிறு முடிகளை அகற்றுவதற்கு இது பயன்படுத்தப்படுகின்றது.

 

 

 

தேவைப்படும் பொருட்கள்:

கோதுமை மாவு – 2 ஸ்பூன்
தயிர் அல்லது பால் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு

கோதுமை மாவு – 2 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்

 

செய்முறை

பவுல் ஒன்றில் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு 15 நிமிடம் காய வைத்து பின்பு நனைத்து கைகளால் துடைக்கவும்.

இவ்வாறு செய்த பின்பு முகத்தில் வித்தியாசமான ஒரு மாற்றத்தினை நீங்கள் காணலாம்.

முடி வளரும் இடங்களில் கோதுமை மாவு மற்றும் தேன் கலவையை தடவி 20 நிமிடங்கள் காய வைத்து பின்பு கீழிலிருந்து மேலாக மெதுவாக பிடுங்கி எடுத்தால் சிறு சிறு முடிகள் முகத்திலிருந்து நீங்கும்.

 

 

 

இதே போன்று கோதுமை மாவுடன், கடலை மாவு, தயிர் அல்லது பால் சேர்த்து ஸ்கிரப் செய்து முகத்தினை கழுவினால் முகம் பிரகாசமாகவும், பொலிவுடனும் காணப்படும்.

இந்த செய்முறைகள் வாரத்தில் 2-3 முறை பயன்படுத்தப்படும்போது, நல்ல மாற்றத்தினைக் காணலாம்.

 

Read Previous

பாம்பு கடித்தவுடன் இதை மட்டும் செய்திடாதீங்க… உயிராபத்து உறுதியாகிடும்..!!

Read Next

வீட்டில் பண கஷ்டம் எப்பொழுதும் வரவே கூடாதா?.. விநாயகர் சிலையை இப்படி வைங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular