முகம் குண்டா இருக்குனு கவலையா?.. கொழுப்பை கரைக்க இந்த பயிற்சிகளை அடிக்கடி பண்ணுங்க..!!

பெரும்பாலான பெண்களுக்கு முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பல வேலைகள் செய்வார்கள்.

 

 

ஆனால் அவர்கள் அவ்வளவு நாள் முயற்சி செய்து பராமரிக்கும் அழகை உடல் எடை அதிகரிப்பு இல்லாமலாக்குகிறது.

உடல் எடை அதிகரிக்கும் பொழுது சிலருக்கு முகம் குண்டாக இருக்கும். முகம் மற்றும் கன்னங்களில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்வதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இது முகம் வீங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், முகம் குண்டாக தெரியக் கூடாது என்பதற்காக செய்யக் கூடிய எளிய முறைகள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.

 

1. சீரான உணவு முறை

ஜங்க் ஃபுட், எண்ணெய் மற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். முடிந்தளவு பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றுமு் முழுமையான தானியங்களை சாப்பிட வேண்டும். புரதம் நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிட பழக வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரையை குறைக்கும் பொழுது முகத்திலுள்ள கொழுப்புக்கள் கட்டுக்குள் இருக்கும்.

2. முகப் பயிற்சிகள்

முகப் பயிற்சிகள் செய்து வந்தால், முகத் தசைகளை வலுப்படுத்தி, கொழுப்பு குறையும்.

  • தாடை உயர்த்தும் பயிற்சி: தலையை நிமிர்ந்து, கீழ் தாடையை மேல் நோக்கி உயர்த்தி 5 விநாடிகள் வைத்திருந்து விடவும்.
  • பல் சீவும் பயிற்சி: பற்களை சீவுவது போல் வாயை அசைப்பது தாடைப் பகுதியை அழகாக வடிவமைக்கும்.

 

 

 

3. கார்டியோ பயிற்சி செய்ய வேண்டும்.

ரன்னிங், நடைப்பயிற்சி, ஜம்பிங் ஜாக், ஸ்விம்மிங் ஆகிய கார்டியோ பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் கொழுப்பு இயற்கையாக குறையும். முகம் மற்றும் தாடை கொழுப்பை குறைக்க நினைப்பவர்கள் வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்லது.

4. போதுமான உறக்கம்

போதுமான உறக்கம் இல்லாவிட்டால், உடல் ஹார்மோன் சீர்குலைந்து கொழுப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குவது முகத்தின் வீக்கம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவியாக இருக்கிறது. அழகான முகம் வேண்டும் என்றால் நன்றாக தூங்க வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. தவறான பழக்கங்களை கட்டுக்குள் வைக்கவும்.

மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாடு முகத்தில் நீர் தங்க வைத்து, தாடை கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. முடிந்தளவு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நல்லது.

Read Previous

பாலூடன் இந்த பொருள் சேர்த்து குடிங்க.. வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்- பெண்கள் செய்து பாருங்க..!!

Read Next

சித்தப்பா உடன் கள்ளத்தொடர்பு.. கணவனை கொன்ற மனைவி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular