மலச்சிக்கலுக்கு முத்தான மூன்று வழிகள்..!!

Oplus_131072

 

1.யோக முத்ரா:

பத்மாசனத்தில் அமருங்கள் இரு கைகளை பின்னுக்கு கட்டிக் கொள்ளுங்கள்.

மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக விடும் பயிற்சியை ஐந்து முறை செய்யுங்கள்

ஆறாவது முறை மூச்சை இழுத்து வெளியிட்டுக் கொண்டே குனியுங்கள் இப்பொழுது சராசரி மூச்சில் இருங்கள் வயிறு நன்றாக அழுத்தட்டும் ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தி மெல்ல உங்கள் உடம்பை அழுத்துங்கள் பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே நிமிர்ந்து பத்மாசனத்தில் அமரவும்

இது போன்று மூன்று முறை செய்யவும்.

2.சுஜி முத்திரை:

சாதாரணமான ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள் இரண்டு கைகளையும் தொடை மேல் வைத்துக் கொள்ளுங்கள்.

கட்டைவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து ஆள்காட்டி விரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்துக்கொண்டு மற்ற மூன்று விரல்களை கட்டைவிரல் மேல் வைத்து அழுத்திக் கொள்ளுங்கள்.

ஐந்து முறை சராசரி மூச்சில் இருங்கள்

இதுவே சுஜி முத்திரை நல்ல பலனை தரக்கூடிய அற்புத முத்திரை மலச்சிக்கலை அறவே நீக்க கூடியது.

3.கடுக்காய் நீர்:

யோகாவையும் முத்திரை பயிற்சியையும் செய்வதோடு மட்டுமல்லாமல் இரவு ஏழு ஏழரைக்கு வெதுவெதுப்பான சுடுநீரில் ஒரு ஸ்பூன் கடுக்காய் கலந்து குடியுங்கள் குளிர்ந்த நீரில் வேண்டாம் இதைச் செய்யும்போது உணவிற்கு முன்போ பின்போ அரை மணி நேரம் இடைவெளி இருக்கட்டும்.

சித்தர்கள் “மலத்தில் சிக்கல் ஏற்பட்டால் மனத்தில் சிக்கல்” உள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள் மனம் இலேசாக தியானத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Read Previous

தர்பூசணி பழ விதை சாப்பிட்டால் வயிறு என்னவாகும்..?? மரம் வளராது-ஆனால் ‘இது’ நடக்கும்..!!

Read Next

நீரிழிவு நோயை இயற்கையாக கட்டுப்படுத்தும் உணவுகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular